iPhone 16e யில் அதிரடியாக ரூ,9,000 வரை டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் ஐபோன் வாங்க சரியான நேரம்

Updated on 24-Jun-2025

நீங்கள் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களைக் கொண்ட புதிய iphone iphone 15 ப்ரோ மாடல்கள் அல்லது iphone 16 வரிசையை வாங்காமல் தேடுகிறீர்கள் என்றால், iphone 16e ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த போனில் பிரீமியம் டிசைன் , அதிரடி பட்டன் மற்றும் சக்திவாய்ந்த A18 சிப்செட் உள்ளன. இந்த ப்ரீமியம் டிசைன் கொண்ட போனில் இ-காமர்ஸ் யலமான ப்ளிப்கார்டில் அதிரடியாக ரூ,9,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

மேலும் இது இந்தியாவில் ரூ,59,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் தற்பொழுது இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

Apple iPhone 16e ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

ஆப்பிள் ஐபோன் 16e தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.54,900க்கு கிடைக்கிறது, அதன் அறிமுக விலையில் ரூ.5,000 தள்ளுபடியும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களுக்கு ரூ.4,000 தள்ளுபடியைப் பெறுவதன் மூலம் கஸ்டமர்கள் விலையை குறைந்த விலையில் வாங்கலாம், இதன் மூலம் விலை ரூ.50,900க்குக் கீழே குறையும்.

கூடுதலாக, நீங்கள் நோ கோஸ்ட் EMI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். புதிய iPhone 16e-க்காக உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், இந்த போன் மாடல், வேலை நிலைமைகள் மற்றும் வேரியண்டை பொறுத்து ரூ.41,600 வரை எக்ஸ்சேஞ் வேல்யூ பெறலாம்.

Apple iPhone 16e சிறப்பம்சம்.

ஆப்பிளின் ஐபோன் 16e, 6.1-இன்ச் OLED 460ppi சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1200 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இது HDR, ட்ரூ டோன் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்த போனில் சக்திவாய்ந்த A18 சிப்செட்டால் சப்போர்ட் செய்கிறது மற்றும் iOS 18.4 யில் இயங்குகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிச்டன்ட் IP68-சர்டிபிகேஷன். இந்த போனில் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:Samsung யின் இந்த போல்டபில் போனில் ரூ,40,500 வரை அதிரடி டிஸ்கவுண்ட் மெகா ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனில் OIS உடன் 48MP வைட்-ஆங்கிள் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம், 4K 60 fps இல் டால்பி விஷனுடன் HDR வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை உள்ளன. இது 30 fps இல் 4K HDR வரை ஆதரவுடன் சினிமாடிக் பயன்முறையையும் கொண்டுள்ளது. இந்த போனில் முன்புறத்தில் 12MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது, இது 60 fps இல் 4K வரை ரெக்கார்ட் செய்வதை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :