Apple iPhone 16 Pro Max
நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு சிறந்த iPhone வாங்க நினைத்தால் iPhone 16 Pro Max குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் Vijay Sales மூலம் அதிரடியாக ரூ,18,400 அதிக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இது ஒரு ஹை எண்டு போன் ஆகும் மேலும் இது அதன் iPhone 17 சீரிஸ் அறிமுகம் செய்யும் குஷியில் இந்த டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் சிறப்பன டிஸ்கவுண்ட் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் ரூ.1,44,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. விஜய் சேல்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், இந்த உயர்நிலை போன் தற்போது ரூ.1,30,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . அதாவது சில்லறை விற்பனையாளர் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் ரூ.13,910 ஸ்டேண்டர்ட் தள்ளுபடியை வழங்குகிறது. HDFC பேங்க் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு EMI எக்ச்செஞ்சின் கீழ் கூடுதலாக ரூ.4,500 தள்ளுபடியைப் பெறலாம்.
இதையும் படிங்க:Apple புதிய பேனர் கண்ணை பறிக்கும் வகையில் ரெடியானது இதில் iPhone 17 சீரிஸ் தயார் Awe Dropping event அர்த்தம் என்ன
Apple iPhone 16 Pro Max அமசத்தை பற்றி பேசினால் இதில் 6.9-இன்ச் கொண்ட Super Retina XDR OLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இதில் 2,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இது ஒரு ப்ரீமியம் போன் ஆகும் இதனுடன் இதில் டைடானியம் டிசைன் உடன் செராமிக் ஷீல்ட் ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை இயக்குவது ஆப்பிளின் 3nm A18 ப்ரோ சிப்செட் ஆகும். மேலும், இந்த போன் ஜென்மோஜி, இமேஜ் ப்ளேகிரவுண்ட் மற்றும் சிரியுடன் கூடிய ChatGPT சப்போர்ட்உள்ளிட்ட அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது .
ஒளியியல் ரீதியாக, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48MP ப்ரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5x ஆப்டிகல் ஜூமை வழங்கும் 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக போனில் 12MP கேமரா உள்ளது.