நீங்கள் iphone பிரியராக இருந்தால், iPhone 16 Pro போனை வாங்குவதற்க்கு இது சரியான நேரமாக இருக்கும், Vijay Sales மூலம் மிக சிறந்த டீல் வழங்கப்படுகிறது, இந்த ப்ளாக்ஷிப் iPhone வெறும் ரூ,1,05,000 யில் வாங்கலாம்.
நீங்கள் பழைய ஐபோனிலிருந்து மேம்படுத்தினாலும் அல்லது ஆப்பிளின் எகோசிஸ்டம் அமைப்புக்கு முன்னேறினாலும், இந்த டீல் ஐபோன் 16 ப்ரோவை கணிசமாகக் குறைக்கப்பட்ட விலையில் சொந்தமாக்குவதற்கான சிறந்த வழியாகும். இந்தச் சலுகையை நீங்கள் எவ்வாறு பெறலாம் இது பற்றி தெரிந்து கொள்ளுங்க
இந்தியாவில் iPhone 16 Pro ரூ.1,19,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, விஜய் சேல்ஸின் வெப்சைட்டில் , ஐபோன் 16 ப்ரோ ரூ.10,400 தள்ளுபடியுடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ.1,09,500 ஆகக் குறைந்துள்ளது.
மேலும், 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு HDFC பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களுக்கு ரூ.4,500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். மாற்றாக, ICICI பேங்க் அல்லது SBI பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி முழு ஸ்வைப் மூலம் பணம் செலுத்தினால் ரூ.3,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.
iPhone 16 Pro டால்பி விஷன் ஆதரவுடன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உள்ளது. பிரேமின் வலது பக்கத்தில் அமைந்துள்ள “கேமரா கட்டுப்பாட்டு பட்டன் ” போட்டோ எடுக்க, வீடியோக்களை ரெக்கார்டிங் செய்ய, கேமரா செட்டிங்களை சரிசெய்ய மற்றும் பலவற்றை விரைவாக அணுக வழங்குகிறது. இந்த ப்ளாக்ஷிப் போனில் கிரேடு 5 டைட்டானியம் பிரேம் உள்ளது.
போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் 16 ப்ரோவில் 48MP ப்ரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 12MP டெலிஃபோட்டோ சென்சார் உள்ளன. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
ஹூட்டின் கீழ், ஐபோன் 16 ப்ரோ ஆப்பிளின் 3nm A18 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது. மேலும், இது 3367mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 24 மணிநேர பயன்பாட்டை உறுதியளிக்கிறது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த போனில் 10,000ரூபாய் பேங்க் அதிரடி ஆபர் நன்மை