ஐபோனில் RS 16,000 வரை தள்ளுபடி வெறும் ஜனவரி 26 வரை மட்டுமே.

Updated on 25-Jan-2021
HIGHLIGHTS

ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ் மற்றும் இதர ஐபோன் மாடல்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

Maple ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

Maple உடனடி தள்ளுபடி அதிகபட்சம் ரூ. 8 ஆயிரமும், HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ் மற்றும் இதர ஐபோன் மாடல்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேபிள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. 
 
சலுகையின் படி ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேபிள் உடனடி தள்ளுபடி அதிகபட்சம் ரூ. 8 ஆயிரமும், HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஐபோன் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ஐபோன் வாங்குவோர் ரூ. 16 ஆயிரம் வரை சேமிக்க முடியும். எக்சேன்ஜ் சலுகை மேபிள் ஸ்டோர்களில் மட்டும் பொருந்தும்.  

ஐபோன் 12 மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் ஐபோன் 12 மினி வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 48,900 வரையிலான தள்ளுபடி பெறலாம். இவைதவிர ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128ஜிபி மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

இந்த விலைகள் அனைத்தும் சாதனங்களின் அடிப்படை வகைகளுக்கானவை என்பதையும், HDFC யின் சிறப்பு சலுகையும் சில காலத்திற்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எக்ஸ்சேன்ஜ்  சலுகையும் ஜனவரி 26 வரை மட்டுமே பெற முடியும். சலுகைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற நீங்கள் மேப்பிளின் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் கடைக்குச் செல்லலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :