Infinix யின் புதிய போன் வெறும் ரூ.10,499 யில் அறிமுகம் கேமர்களுக்கு பிரியமான போனாக இருக்கும்

Updated on 11-Jul-2025
HIGHLIGHTS

Infinix இந்தியாவில் இன்று அதன் Infinix Hot 60 5G+ போனை அறிமுகம் செய்தது.

இந்த போனில் 5,200mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும்

Infinix Hot 60 5G + இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.10,499 ஆகும்

Infinix இந்தியாவில் இன்று அதன் Infinix Hot 60 5G+ போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் 5,200mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இதன் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Infinix Hot 60 5G + விலை தகவல்.

Infinix Hot 60 5G + இன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.10,499 . இந்த ஸ்மார்ட்போன் ஸ்லீக் பிளாக், டன்ட்ரா கிரீன் மற்றும் ஷேடோ ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 17 முதல் இ-காமர்ஸ் தளமான Flipkart, Infinix India ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். வெளியீட்டு சலுகையைப் பற்றி பேசுகையில், அனைத்து பேங்க்களின் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.500 தள்ளுபடி பெறலாம். அதே நேரத்தில், Infinix கடையில் ஸ்டாக் நீடிக்கும் வரை இலவச XE23 TWS இயர்பட்களையும் பெறலாம்.

இதையும் படிங்க iQOO 12 போனில் அதிரடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

Infinix HOT 60 5G+ டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே:-Infinix HOT 60 5G+ போனில் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்குகிறது, இந்த போனில் பன்ச் ஹோல் ஸ்டைல் டைனமிக் ஸ்க்ரீன் வழங்குகிறது மேலும் இதில் 120Hz டிஸ்ப்ளே உடன் 700 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

பர்போமான்ஸ்:-Infinix HOT 60 5G+ ஆனது XOS 15 உடன் இணைந்து செயல்படும் Android 15 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பர்போமன்சுக்கு இந்த ஃபோனில் 6 நானோமீட்டர் MediaTek Dimensity 7020 ஆக்டா-கோர் ணைடிஊஇஅஐ உள்ளது,

கேமரா:-இந்த போனில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, போர்ட்ரெய்ட் லென்ஸுடன் இணைந்து செயல்படும் 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ காளிர்க்காக 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

பேட்டரி:- இந்த போனில் 5,200Mah பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :