Infinix நிறுவனம் இன்று அதன் Infinix’s GT 30 Pro இந்தியாவில் அறிமுகம் செய்தது மேலும் இந்த போன் கேமர்களுக்கு இந்த போன் மிகவிவும் கவரும் வகையில் இருக்கும் அதாவது இந்த போனில் மிகவும் பவர்புல்லான MediaTek Dimensity 8350 அல்ட்டிமேட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க .
Infinix GT 30 Pro 8 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ, 24,999க்கும், 12 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ,26,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் GT 30 ப்ரோவுடன் சிறப்பு பேங்க் சலுகைகளையும் வழங்குகிறது, இது வெளியீட்டு நாள் விலையை முறையேரூ, 22,999 மற்றும்ரூ, 24,999 ஆகக் குறைக்கிறது.
Infinix GT 30 Pro போனில் 6.78 இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 144Hz வரை ரெப்ராஸ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த போன் மேலே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கை கொண்டுள்ளது, அதாவது இது சிறிது ஸ்ப்லாட்டார் மற்றும் லேசான மழையைத் தாங்கும், ஆனால் தண்ணீருக்கு அடியில் முழுமையாக மூழ்காது.
மோட்டோரோலாவின் எட்ஜ் 60 ப்ரோ மற்றும் ரியல்மி பி3 அல்ட்ரா போன்றவற்றில் நாம் முன்பு வைத்திருந்த SoC-யைப் போலவே, GT 30 ப்ரோவும் MediaTek Dimensity 8350 Ultimate-ப்ரோசெசர் கொண்டுள்ளது . மேலும் இந்த போன் 12GB வரை LPDDR5x ரேம் மற்றும் 256GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க:Realme வெறும் ரூ,10,000 பட்ஜெட்டில் புதிய போன் அறிமுகம் 6000mAh பேட்டரியுடன் கலக்கும் போன்
இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் 108MP ப்ரைமரி கேமரா உடன் இதில் 8MP அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இது 4K at 60fps வீடியோ ரெக்கார்ட் செய்ய முடியும், இதனுடன் இந்த போனில் முன் பக்கத்தில் 13MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது அதே இதன் முன்புறத்தில் 4K வீடியோ 30fps யில் எடுக்க முடியும்
இப்பொழுது கடைசியாக பேட்டரி பற்றி பேசினால் இந்த போனில் 5,500mAh பேட்டரியுடன் இதில் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.