Infinix யின் அதன் புதிய போனை சமிபத்தில் இந்தியாவில் Infinix GT 30 5G+ அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து Infinix GT 30 5G+ இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Infinix GT 30 5G+ 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.19,499க்கும் , 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.20,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் சிறப்பு விலை ரூ.17,999 ஆகும், இது ICICI பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ.1500 தள்ளுபடிக்குப் பிறகு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்று நண்பகல் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் தொடங்குகிறது. கஸ்டமர்கள் இந்த போனை பல்ஸ் கிரீன், சைபர் ப்ளூ மற்றும் சைபர் பிளேட் வைட் நிறங்களில் வாங்கலாம்.
Infinix GT 30 5G+ யின் இந்த போன் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் இது 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இதில் 4500nits ப்ரைட்னாஸ் உடன் TUV Rheinland கண் பாதுகாப்பு (eye care) சர்டிபிகேஷன் மற்றும் கொர்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.
இதையும் படிங்க:Flipkart Freedom Sale:Google Pixel 8 Pro அதிரடிடாக ரூ,54,000 வேற லெவல் டிஸ்கவுண்ட் தூக்குங்கடா தங்கத்தை
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek Dimensity 7400 SoC அடிப்படையின் கீழ் XOS 15 உடன் Android 15 யில் இயங்குகிறது 8GB யின் LPDDR5X RAM மற்றும் 256GB யின் UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இந்த போனில் இரண்டு முக்கிய OS அப்க்ரேட் மற்றும் மூன்றாண்டு செக்யுரிட்டி அப்டேட் வழங்குகிறது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, GT 30 5G + பின்புறத்தில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த இன்ஃபினிக்ஸ் இந்த போனில் 5,500mAh பேட்டரி உள்ளது, இது 45W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.