கூகுள் கை விட்ட பிறகும் மனதை தேத்தி கொண்டு அடுத்த கட்டத்துக்கு சென்ற Huawei.

Updated on 25-Jun-2019

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அதனை தொடர்ந்து .சீனாவின் Huawei நிறுவனம் தனது சொந்த மொபைல் இயங்குதளமான ஹாங்மெங்கிற்கு காப்புரிமை பெற கிட்டத்தட்ட உலகின் ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது.

இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹாங்மெங் எனும் இயங்குதளத்தை உருவாக்கி அதனை பயன்படுத்த கம்போடியா, கனடா, தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஐ.நா.வின் சர்வதேச காப்புரிமை அலுவலகங்களில் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

இதற்க்கு முன்னர் வெளியான தகவல்களில் ஹூவாய் தனது புதிய இயங்குதளத்தை சீனாவில் ஹாங்மெங் என்ற பெயரிலும், சர்வதேச சந்தையில் ஆர்க் ஒ.எஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை ஹூவாய் நிறுவனம் மே 27 ஆம் தேதி சமர்பித்திருக்கிறது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹூவாய் தனது மொபைல் இயங்குதளம் பற்றி அதிகளவு விவரங்களை வழங்கவில்லை. காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களில் ஹாங்மெங் இயங்குதளத்தை ஸ்மார்ட்போன், போர்டபில் கம்ப்யூட்டர்கள், ரோபோட்கள் மற்றும் கார் டி.வி.க்களில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க வர்த்தக தடை ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்த மாற்று இயங்குதளம் ஒன்றை ஹூவாய் உருவாக்கி வைத்திருப்பதாக ஹூவாய் நிறுவன நுகர்வோர் பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு தெரிவித்தார்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :