6 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.22,807) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
ஹூவாயின் HONOR பிராண்டு இந்தியாவில் HONOR 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் ஹானர் 20 என்ற பெயரில் அறிமுகம் செய்தது . புதிய HONOR 20i ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
HONOR 20i ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.22,807) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.