Google Pixel 6 வெளியிட்டிற்க்கு முன்னே விலை லீக் ஆகியது, அறிமுகம் எப்போ தெரிஞ்சிக்கோங்க.
பிக்சல் 6 சீரிஸ் பற்றி லேட்டஸ்ட் அப்டேட்
பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும்
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும்
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்தின் டென்சார் சிப்செட் பயன்படுத்துகின்றன.
பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும். பிக்சல் 6 ப்ரோ மாடல் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
Surveyஅதன்படி பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.71 இன்ச் 3120×1440 பிக்சல் வளைந்த பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50 எம்பி பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஜெர்மன் சில்லறை விற்பனையாளரால் கசிந்த தகவலின் படி, பிக்சல் 6 ஐரோப்பாவில் சுமார் ரூ .56,100 ஆகும் மற்றும் இந்த விலையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும்.
ஆர்டர் சலுகைகள் இங்கே
ப்ரீ ஆர்டர் சலுகைகள் அக்டோபர் 19 முதல் 27 வரை இயங்கும் என்றும், இந்த நேரத்தில் வாடிக்கையாளர் போஸிடமிருந்து நோய்ஸ் கேன்ஸிலேசன் ஹெட்ஃபோன்களைப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது, இதன் விலை சுமார் ரூ. 24,200. ஆகும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
