நீங்கள் புதிய போன் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதும் நீங்கள் ஒரு Google போன் பிரியராக இருந்தால் Google Pixel 9 Pro XL யில் அதிகபட்சமான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,30,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் பேங்க் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
கூகிள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் இந்தியாவில் ரூ.1,24,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட் தற்போது இந்த போனில் ரூ.20,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது, இதன் விலை ரூ.1,04,999 ஆகக் குறைந்துள்ளது. அதற்கு மேல், HDFC பேங்க் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களில் ரூ.10,000 கூடுதலாக தள்ளுபடி பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றலாம்.
Google Pixel 9 Pro XL 1344 x 2992 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.7 இன்ச் LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ரஸ் ரேட்டை வழங்குகிறது, HDR ஐ ஆதரிக்கிறது மற்றும் 3000 நைட்ஸ் வரை ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இந்த போனின் ஸ்க்ரீனில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. இந்த போனில் இயக்குவது கூகிளின் டென்சர் G4 சிப்செட் ஆகும். மேலும், Google Pixel 9 Pro XL 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5060mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :iPhone யின் இந்த போனில் வாழ் நாளில் இல்லாத அளவுக்கு வேற லெவல்அதிரடியாக ரூ,10,910 டிஸ்கவுண்ட்
போட்டோ எடுப்பதற்காக, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் OIS உடன் 50MP ப்ரைம் சென்சார், 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 42MP கேமரா உள்ளது.