Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,500 டிஸ்கவுண்ட் Sasa Lele Sale மெகா டிஸ்கவுண்ட்

Updated on 05-May-2025
HIGHLIGHTS

நீங்கள் ஒரு ஆண்ட்ரோய்ட் போன் வாங்க விரும்பினால் நீங்க இந்த Google ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கலாம்

இப்பொழுது Google Pixel 9 இந்த போனில் அதிரடியாக 10,500 குறைக்கப்பட்டுள்ளது

இந்த போனை வெறும் ரூ,70,000 யில் வாங்கலாம்

நீங்கள் ஒரு ஆண்ட்ரோய்ட் போன் வாங்க விரும்பினால் நீங்க இந்த Google ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கலாம், ஏன் என்றால் இப்பொழுது Google Pixel 9 இந்த போனில் அதிரடியாக 10,500 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனை Flipkart Sasa Lele Sale மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் , அதாவது நீங்கள் இந்த போனை வெறும் ரூ,70,000 யில் வாங்கலாம் மேலும் ஆண்ட்ரோய்ட் பிரியர்களுக்கு மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது மேலும் இதில் மிக சிறந்த AI அம்சம் மற்றும் கேமரா செட்டப் வழங்குகிறது, மேலும் இந்த போனின் ஆபர் விலை மற்றும் டிஸ்கவுண்ட் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Google Pixel 9 யின் விலை மற்றும் டிஸ்கவுண்ட்

இந்தியாவில் ரூ.79,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகிள் பிக்சல் 9 இப்போது ரூ.74,999க்கு கிடைக்கிறது, பிளிப்கார்ட்டில் பிளாட் ரூ.5,000 தள்ளுபடியுடன். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.5,750 வரை பேங்க் தள்ளுபடியையும் பெறலாம், இதன் மூலம் ரூ.69,249 வரை கிடைக்கும். கூடுதலாக, பிளிப்கார்ட் மாதம் ரூ.6,250 முதல் தொடங்கும் கட்டணமில்லா EMI விருப்பங்களையும், பழைய போன்களை மாற்றினால் ரூ.43,150 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் வழங்குகிறது.

Google Pixel 9 சிறப்பம்சம்.

கூகிள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 120Hz வரை ரெப்ரஸ் ரேட்டை 2700 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த போன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. டென்சர் G4 செயலி மூலம் இயக்கப்படும் இந்த போன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

போட்டோ எடுப்பதற்கு, இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் OIS உடன் கூடிய 50MP ப்ரைம் கேமரா மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்காக, கூகிள் பிக்சல் 9 இல் 10.5MP முன் கேமரா உள்ளது. கூடுதலாக, இந்த போன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

அதோடு மட்டும் அல்ல, கூகிள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன், மேஜிக் எடிட்டர், சர்க்கிள் டு சர்ச் மற்றும் இன்-பில்ட் ஜெமினி போன்ற AI அம்சங்களுடன் வருகிறது. மேலும், கூகிள் ஏழு வருட OS மற்றும் செக்யுரிட்டி அப்டேட்களை இந்த போனில் வழங்குகிறது.

இதையும் படிங்க Amazon யின் சூப்பர் ஆபர் இந்த iPhone யில் வேற லெவல் டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :