Google Pixel 8 now available with 29k big discount on flipkart
நீங்க Google போன் பிரியராக இருந்தால் Google Pixel 8 போனை குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இந்த போனில் ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது நீங்கள் Google Pixel 8 பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.
Google Pixel 8 போனை இந்தியாவில் 75,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, தற்பொழுது ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் ரூ,47,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, அதாவது இதில் 28,000ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர கூடுதலாக இந்த போனில் HDFC பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 3,000ருபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ச்செஞ்சின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
கூகிள் பிக்சல் 8 ஆனது 6.2-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவை 120Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 2000 nits உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது.
பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் கூகிள் டென்சர் ஜி3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, இந்த கைபேசியின் பின்புறத்தில் இரண்டு கேமரா சென்சார்கள் உள்ளன: 50MP பிரதான கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் லென்ஸ். முன்பக்கத்தில், 10.5MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
கடைசியாக Google Pixel 8 யின் இந்த போனில் 4575mAh பேட்டரி 27W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: POCO M7 5G இன்று முதல் விற்பனையின் மூலம் ஸ்பெஷல்ஆபரின் கீழ் வெறும் ரூ,6000 யில் வாங்கலாம்