Google Pixel 4A ஜூலை 13 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

Updated on 17-Jun-2020
HIGHLIGHTS

Pixel 4A ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுக

Pixel 4A விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய Pixel 4A ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பார்லி புளூ நிறத்தில் வெளியாகும்

கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை பிக்சல் 4ஏ விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

Google Pixel 4A  எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– டைட்டன் M செக்யூரிட்டி சிப்
– 6 ஜிபி LPDDR4X ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
– டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
– 3080 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் வெளியீடு மீண்டும் தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.

புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பார்லி புளூ நிறத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மே மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. பின் ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :