GOOGLE PIXEL 3A மற்றும் PIXEL 3A XL அறிமுகம் அதன் ஆரம்ப விலை RS 39,999 ஆகும்.

Updated on 08-May-2019
HIGHLIGHTS

GOOGLE PIXEL 3A விலை RS 39,999 ஆகும்.

Rs 44,999 யில் அறிமுகமாகும் Pixel 3a XL

மே 15 பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்

Google இறுதியாக அதன்  I/O 2019 யின் நிகழ்வில் Pixel 3a மற்றும் Pixel 3a XL  ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட நிறுவனத்தின் முதன்மை பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL இன் குறைந்த பதிப்புகள் ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ப்ளாக்ஷிப் போன்ற கேமரா அம்சங்களை வழங்குகின்ற.

PIXEL 3A மற்றும் PIXEL 3A XL விலை 

இந்தியாவில் புதிய பிக்சல் 3A ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இசிம் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாதங்களுக்கான யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.

PIXEL 3A மற்றும் PIXEL 3A XL சிறப்பம்சங்கள்:

– பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 1080×2220 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 441 PPI, HDR
– டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
– பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI, HDR
– டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 615 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm, ƒ/1.8,  76° FOV, OIS, EIS
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84° FOV,  1.12μm
– கைரேகை சென்சார்
– ஆக்டிவ் எட்ஜ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3000 Mah பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்தடன் இவை ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமராLED . ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுளின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கின்றன. 

இத்துடன் இவை முறையே 3000Mah . மற்றும் 3700 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளன

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :