Google இன்று அதன் Made By Google Event யில் அதன் Google Pixel 10 சீரிஸ் போனை அறிமுகம் செய்தது இதில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL மற்றும் Pixel 10 Pro Fold ஆகிய போன்கள் அறிமுகம் செய்தது மேலும் இதில் பல சுவாரஸ்ய அம்சங்கள் இருக்கிறது இதனுடன் இந்த இதில் நாம் Pixel 10 Pro மற்றும் Pixel 10 Pro XL பற்றிய தகவல் பார்க்கலாம்
Google Pixel 10 Pro பற்றி பேசினால் 6.3 இன்ச் எக்ஜுவ டிஸ்ப்ளே 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ 1280 x 2856 LTPO OLED ஸ்மூத் டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விகடஸ் 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. இது 3,300 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது . மேலும் இந்த போனில் அதே டென்சர் G5 சிப்செட் மற்றும் டைட்டன் M2 சிப்பைக் கொண்டுள்ளது. இது 16GB வரை ரேம் மற்றும் 256GB சேமிப்பிடத்தைப் பெறுகிறது. சாதனம் 4,870 mAh பேட்டரி மற்றும் 30W பாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனில் 50 MP வைட் என்கில் கூடிய மூன்று கேமராக்களைப் வழங்குகிறது. இது மேக்ரோ ஃபோகஸுடன் கூடிய 48 MP அல்ட்ரா-வைட் மற்றும் 48 MP 5x டெலிஃபோட்டோ லென்ஸைப் வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்த போனில் 42MP முன்பக்க கேமராவை வழங்குகிறது.
கூகிள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு 6.4-இன்ச் OLED பேனலுடன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் வருகிறது. இது 3,000-நிட் பீக் பிரைட்னஸைப் பெறுகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 8-இன்ச் LTPO OLED உள் திரையை வழங்குகிறது. ஸ்மார்ட்போன் டென்சர் G5 சிப்செட் மற்றும் டைட்டன் M2 சிப்பிலிருந்து அதன் சக்தியைப் வழங்குகிறது.
இந்த சாதனம் 5,015 mAh பேட்டரி மூலம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பு மாறுபாட்டுடன் (பிராந்தியங்களைப் பொறுத்து) வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 48 MP அகல கேமரா, மேக்ரோ ஃபோகஸுடன் 10.5 MP அல்ட்ராவைடு மற்றும் 10.8 MP 5x டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இது 20x வரை சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 0.5x, 1x, 5x மற்றும் 10x இல் ஆப்டிகல் தரத்தை ஆதரிக்கிறது. இது இரட்டை 10MP முன் கேமராக்களையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Google யின் புதிய போன் வரும் குஷியில் அதன் பழைய மாடலில் அதிரடி டிஸ்கவுண்ட் எவ்வளவு பாருங்க
இந்த சாதனம் கூடுதல் நீடித்து உழைக்க ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினிய சட்டகம் மற்றும் கீலில் மல்டி-அலாய் ஸ்டீலுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 16 இல் இயங்குகிறது மற்றும் 7 வருட OS, பாதுகாப்பு மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்டை வழங்கும்
பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் விலையைப் பற்றிப் பேசுகையில், பிக்சல் 10 ப்ரோவின் விலை இந்தியாவில் ரூ.1,09,999 ஆகவே உள்ளது. நிறுவனம் இதனுடன் நோ கோஸ்ட் EMI விருப்பத்தையும் வழங்குகிறது. அதேசமயம் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்-க்கு நீங்கள் ரூ.1,24,999 செலவிட வேண்டும். நீங்கள் இப்போது போனை முன்பதிவு செய்யலாம். இந்த இரண்டு போன்களிலும் ஒரு வருடத்திற்கு கூகிள் AI ப்ரோவை இலவசமாக அக்சஸ் நிறுவனம் வழங்குகிறது.