நீங்கள் ஒரு Google Pixel போன் பிரியராக இருந்தால்,Google Pixel 10 சீரிஸ் அறிமுகத்திற்காக காத்திருந்தால் இது நல்ல செய்தியாக இருக்கும், அறிக்கையின் படி பார்த்தால் Google Pixel 10 அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது அதாவது Google தனது பிரியர்களுக்காக சர்ப்ரைஸ் அழைப்பிதழை அனுப்பி வருகிறது இந்த ஸ்பெசல் நிகழ்வு லண்டனில் நடைபெற இருக்கிறது, கூகிள் பிக்சல் 10 சீரிஸ் ஆண்ட்ராய்டு 16 வெளியீட்டு தேதிக்கு முன்பே அறிமுகம் செய்யலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Google Pixel 10 விலை, கேமரா,டிசைன் போன்ற மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அறிக்கைகளின்படி, ஜூன் 27, 2025 அன்று “Pixel Penthouse” என்று அழைக்கப்படும் 90 நிமிட நிகழ்வுக்கு பிக்சல் சூப்பர் ரசிகர்களை நிறுவனம் அழைத்துள்ளது. இந்த நிகழ்வு 25 அதிர்ஷ்டசாலி பயனர்களுக்கு பிக்சல் 10 போனின் மற்றும் அம்சங்களைப் பற்றிய முதல் வியுவ் வழங்கும். இந்த நிகழ்வில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது எளிய கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமே. ஜூன் 11 அன்று அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
மேலும் இந்த அறிக்கை உண்மை என நம்பபட்டால் இது Google அதன் Pixel 10 சீரிஸ் ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள் அறிமுகம் செய்யலாம் மேலும் இது samsung அன்பெக்ட் நிகழ்வு மற்றும் iPhone 17 அறிமுகத்திற்கு முன்னதாக இருக்கு.
Google Pixel 10 சீரிஸ்யின் கீழ் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, மற்றும் foldable Pixel 10 Pro Fold ஆகியவை அறிமுகமாகலாம்.
கூகிள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் டென்சர் ஜி5 சிப் மூலம் இயக்கப்படலாம் என்றும், 12 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்படலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 16 இல் இயங்கக்கூடும். கூகிள் போட்டோக்கள் வீடியோ எடிட்டிங், பட மாற்றம் மற்றும் ஸ்கெட்சிங் போன்ற சில புதிய AI அம்சங்களையும் இது பெறக்கூடும்.
ஒரு பெரிய அப்டேட்டாக , இந்த போனில் 64MP டிரிபிள் கேமராவைப் வழங்கும் . இந்த அமைப்பில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கலாம்.
இதையும் படிங்க:Motorola யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,250 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்
கூகிள் பிக்சல் 10 அதன் எதிர்ப்பர்க்கபடும் போலவே அதே டிசைன் மொழியை வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ஒத்த பொத்தான் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வடிவ காரணி ஆகியவை அடங்கும். இருப்பினும், மிக முக்கியமான காட்சி மாற்றம் மூன்று பின்புற கேமரா அமைப்பைச் சேர்ப்பதாக இருக்கலாம்.
Google Pixel 10 யின் விலை சுமார் ரூ,79,999 ஆக இருக்கும், அதுவே இதன் Pixel 10 Pro ரூ,99,999க்கு வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் Obsidian (Black), Blue, Iris (Purple), மற்றும் Limoncello (Yellow) ஆகிய கலர் அடங்கும்.