கூகுளின் புத்தகம் போல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் தருகிறது.

Updated on 09-Sep-2019

Google Foldable Smartphone Patent : மடக்கு போன்களை (Foldable Smartphones) ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்துவிட்டு, பிறகு ஸ்கிரினில் ஏற்பட்ட பிரச்சனைகளால் விற்பனை செய்யாமல் தவித்து வருகிறது சாம்சங் நிறுவனம். சாம்சங் நிறுவனத்திற்கு பிறகு, ஹூவாய் நிறுவனமும் இதே பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. போன்களை இரண்டாக மடக்கும் போது, மடியும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவே மாதக்கணக்காக விற்பனை தேதியை அறிவிக்காமல் பின் தங்கிவிட்டது இந்த இரண்டு நிறுவனங்களும்.

சாம்சங் – ஹூவாய் நிறுவனத்தின் மடக்கு போன்கள் எப்படி இருக்கும்?
தற்போது மடக்கு போன்களை தயாரித்தே தீருவேன் என்று தீராத ஆனால் விபரீத ஆசையில் களம் இறங்கியுள்ளது கூகுள் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி எஃப் நோட்டு புத்தகங்களைப் போல் உட்புறமாக மடிக்கும் இயல்பில் உருவாக்கப்பட்டவை. மேட் எக்ஸ் வெளிப்புறமாக மடக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டவை. இரண்டு அல்லது ஒற்றை திரைகளாக அந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொள்ள இயலும். ஆனால் கூகுளோ ஒரே நேரத்தில் பல்வேறு திரைகளை கொண்ட ஸ்மார்ட்போனை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக பேட்டண்ட் ரைட்ஸையும் வாங்கியுள்ளது கூகுள்.

இதன் பின்பக்கத்தில் பேட்டரி, ப்ரோசசர், மற்றும் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பக்கங்கள் அனைத்தும் தனித்தனியாக, நாம் புத்தகங்களை வாசிப்பது போன்றே வாசிப்பனுபவத்தை பெறுவதற்காக வடிவமைக்கப்படுள்ளது. மேலும் இது ஒரு தனி திரையாகவும் செயல்படும். பக்கங்களை தங்களின் விருப்பம் போல் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் நிறைய பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் போல் இது இருக்கும் என்றும், அந்த ஸ்கிரீன்கள் அனைத்தும் பேஜஸ் என்று அழைக்கப்படும் என்றும் கூகுள் தரப்பு கூறியுள்ளது. இதனுடைய வெளிப்புற பக்கமும் டிஸ்பிளேவாக செயல்படும். ஆனால் இதனால் வளைந்து கொடுக்க இயலாது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :