Samsung Galaxy Note 10 அறிமுக தேதி தகவல் வெளியானது

Updated on 20-Jun-2019

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான கேலக்ஸி அன்பேக்டு விழா புரூக்லின் நகரில் உள்ள பார்கிளேஸ் மையத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

கேலக்ஸி அன்பேக்டு விழா நடைபெற இன்னும் அதிக நேரம் இருப்பதால், சாம்சங்கின் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகி இருப்பதால், நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு முன்னதாக நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை இதே அரங்கில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகி வருகிறது.

இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் ஸ்மார்ட்போனில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றில் பிரெஷர் சென்சிட்டிவ் எட்ஜ்கள் மற்றும் 4500 MAH பேட்டரி வழங்கப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :