சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் முதல் விற்பனைக்கு வருகிறது.
விலை மற்றும் விற்பனை
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் ராவென் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 23-ம் தேதி ஆன இன்று அமேசான் தளத்தில் முதல் விற்பனைக்கு வருகிறது மேலும் பல தகவலுக்கு அமேசான் வெப்சைட் பார்க்கலாம்.
– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
– மாலி-G72MP3 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
– டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பாடி, பிர்தயேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்களை கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000Mah. பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.