Google Pixel 9
Flipkart யில் Big Festive Dhamaka சேல் ஆரம்பித்துள்ளது இந்த விற்பனையின் மூலம் Google Pixel 9 போனை குறைந்த விலையில் வாங்கலாம், இந்த தீபாவளிக்கு புதியதாக போன் வாங்கனும்னா இந்த போனில் அதிரடியாக ரூ,25000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் பேங்க் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
கூகிள் பிக்சல் 9 இன் 12 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் பிளிப்கார்ட்டில் ரூ.54,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் பிளிப்கார்ட் AXIS பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% கேஷ்பேக் (ரூ.750 வரை) அடங்கும், இதன் இதன் விலை ரூ.54,249க்கு வாங்கலாம் . எக்ஸ்சேஞ்ச் சலுகை விலையை ரூ.39,640 வரை குறைப்பை பெறலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு நன்மையும் எக்ஸ்சேஞ் செய்யப்படும் போனின் தற்போதைய நிலையைப் பொறுத்தது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.79,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதாவது இப்பொழுது இந்த விலை ரூ.25,750 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது .
இதையும் படிங்க தீபாவளி ஸ்பெஷல் சலுகையாக iPhone யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
கூகிள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் ஆக்டுவா OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 1080×2424 பிக்சல்கள் ரேசளுசன் , 60Hz-120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 2,700 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டென்சர் G4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 யில் இயங்குகிறது
கேமரா செட்டிங் பற்றிப் பேசுகையில், பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் வைட்-ஆங்கிள் கேமராவும், பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 10.5 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 152.8 mm நீளம், 72 mm அகலம், 8.5 mm திக்னஸ் மற்றும் 198 கிராம் எடை கொண்டது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டார் ரேசிச்டண்டிர்க்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qi-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
கனெக்சன் விருப்பங்களில் Wi-Fi 6, புளூடூத் 5.3, NFC, GPS, டூயல்-பேண்ட் GNSS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக இந்த போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டுள்ளது.