குறைந்த விலையில் 5ஜி ப்ரோசெசர் கொண்டுவருவோம்.

Updated on 30-May-2020
HIGHLIGHTS

5ஜி திறன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் நொடிக்கு 2.55 ஜிபி வேகத்தில் டவுன்லோடு

புதிய சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 64 எம்பி பிரைமரி கேமரா

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கும் திறன் கொண்ட 5ஜி எக்சைனோஸ் பிராசஸரை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 பிராசஸர் ஃபிளாக்ஷிப் ரக எக்சைனோஸ் 980 மற்றும் 990 சீரிஸ் பிராசஸர்களின் கீழ் நிலை நிறுத்தப்படுகிறது.

புதிய பிராசஸர் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக FHD+ அல்லது 1080 பிக்சல் டிஸ்ப்ளேக்கள், 4 ஜிபி ரேம், UFS 2.1 அல்லது eMMC 5.1 ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 சிப்செட் 8 நானோமீட்டர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் அதிவேகமாக இயங்குவதோடு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சிப்செட் ஒரே சமயத்தில் மூன்று கேமரா சென்சார்களையும், தனித்தனியே ஐந்து சென்சார்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.

இதுதவிர 5ஜி திறன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் நொடிக்கு 2.55 ஜிபி வேகத்தில் டவுன்லோடு வேகமும், 4ஜி எல்டிஇ மோடில் அதிகபட்சம் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.

அந்த வகையில் புதிய சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் 20 எம்பி டூயல் கேமரா செட்டப் இயக்க வழி செய்யும். இதை கொண்டு 4கே தரத்தில் 30fps வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :