REALME NARZO 10A இன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. Realme யின் புதிய போன்களின் சிறப்பு அம்சங்களில் பெரிய பேட்டரி, டிரிபிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே போன்றவை அடங்கும். இன்று இந்த போன் பிளிப்கார்ட்டில் விற்கப்படும். Realme இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து இந்த சாதனத்தை வாங்கலாம். இந்த போனை நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் வாங்கலாம்.
REALME NARZO 10A இந்தியாவில் ரூ .8,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த போன் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கும் என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும்.
ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது.நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது.
நார்சோ 10ஏ மாடலில் 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு சாதனங்களிலும் 1080 பிக்சல் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
நார்சோ 10ஏ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 2 நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5, கைரோமீட்டர் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ள