Realme 8i, Realme 8s 5G: இந்தியாவில் லேட்டஸ்ட் MediaTek SoC மற்றும் 108MP கேமரா வெளியிட்டு தேதி லீக்

HIGHLIGHTS

Realme 8i, Realme 8s 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் கடந்த மாதம் அறிவித்தார்

Realme 8i மற்றும் Realme 8s 5G யின் செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒரு வெர்ஜுவால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும்

Realme 8i, Realme 8s 5G: இந்தியாவில் லேட்டஸ்ட் MediaTek SoC மற்றும் 108MP கேமரா வெளியிட்டு  தேதி லீக்

Realme 8 சீரியலின் இரண்டு புதிய போன்கள், Realme 8i, Realme 8s 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Realme 8i மற்றும் Realme 8s 5G செப்டம்பர் 9 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். Realme இந்தியாவும் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் ஏற்கனவே இந்திய சந்தையில் இருக்கும் Realme 8, Realme 8 Pro மற்றும் Realme 8 5G ஆகியவற்றின் பங்காளிகளாக மாறும். இந்த இரண்டு போன்களையும்  இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் கடந்த மாதம் அறிவித்தார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 8i மற்றும்  Realme 8s 5G யின் செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒரு வெர்ஜுவால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். சமீபத்தில் தொடங்கப்பட்ட மீடியாடெக் Dimensity810 ப்ரோசெசர் Realme 8s 5G இல் கொடுக்கப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Realme 8i  சிறப்பம்சம் 

ரியல்மி மிட்-ரேஞ்சர் ஆனது 6.59 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளேவை 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டிருக்கும் மற்றும் செல்பீ கேமராவுக்கு ஹோல்-பஞ்ச் கட்அவுட்டைப் பெறலாம்.இது மீடியாடெக் ஹீலியோ ஜி 96 எஸ்ஓசி உடனாக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும்.

இந்த புதிய ப்ராசஸர் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேக்களையும் 108 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சாரையும் ஆதரிக்கிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, இந்தஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பெறும். செல்பீக்களுக்கு, இது 16 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை பெறலாம்.

இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது நிச்சயமாக பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும், ஆனால் W விவரங்கள் வெளியாகவில்லை.

Realme 8s 5Gயின் ஏதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சம் 

Realme 8s 5G மீடியாடெக் டைமென்சிட்டி 810 ப்ராசஸருடன் வழங்கப்படும். இந்த ப்ரோசெசர் மூலம் அறிமுகப்படுத்தப்படும் உலகின் முதல் போன் இதுவாகும். நிறுவனம் இந்த தகவலை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5 ஜி இணைப்பு கிடைக்கும். 6.5 இன்ச் டிஸ்பிளே ரியல்மி 8 எஸ் 5 ஜி யில் காணப்படுகிறது, இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும். இது தவிர, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்தை போனில் காணலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போனில் கிடைக்கும். 64 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பை இதில் காணலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile