பட்ஜெட் விலையில், நேர்மையான அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் செய்து, நற்பெயர்களை சம்பாதித்து வரும் இன்பினிக்ஸ் நிறுவனம், இந்திய பட்ஜெட் வாசிகளை மேலும் கவரும் நோக்கத்தின் கீழ் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு அறிவித்துள்ளது.
பட்ஜெட் விலையில், நேர்மையான அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் செய்து, நற்பெயர்களை சம்பாதித்து வரும் இன்பினிக்ஸ் நிறுவனம், இந்திய பட்ஜெட் வாசிகளை மேலும் கவரும் நோக்கத்தின் கீழ் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு அறிவித்துள்ளது.
விலை குறைப்பை பெற்றுள்ள மாடல் - இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஆகும். இதன் விலை தற்போது ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலைக்குறைப்பு விரைவில் நாட்டில் அறிமுகமாகும்இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் விளைவாகவே இருக்க வேண்டும், விலை குறைப்புக்குப் பிறகு, இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் மாடல் இப்போது ரூ.9499 ஆக உள்ளது.
நினைவூட்டும் வண்னம் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மே மாதம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் முறையே ரூ.9,999 மற்றும் ரூ.10,999 க்கு வெளியானது.
அதாவது இந்த இரண்டு வகைகளிலும் ரூ.500 என்கிற விலை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலை ஏற்கனவே பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart-இல் பிரதிபலிக்கிறது என்பதால் பயனர்கள் இப்போது இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலைக்கு வாங்கலாம்.
மீடியாடெக் ஹீலியோ ஜி 85 12nm சிப்செட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கார்டெக்ஸ்-ஏ 75 கோர்ஸ் (2GHz) மற்றும் ஆறு A55 கோர்ஸ் (1.8GHz) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
6.82 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்டையும் இணைக்கிறது.
இது லோ லைட் புகைப்படங்களுக்கான சூப்பர் நைட்ஸ்கேப், 240fps ஸ்லோ-மோ வீடியோ பதிவு மற்றும் 1080p வீடியோ பதிவு போன்ற கேமரா அம்சங்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை பேக் செய்கிறது