iphone
BBD Sale:Flipkart யின் இந்த ஆண்டின் மிக பெரிய விற்பனையான Big Billion Days 2025 sale, செப்டம்பர் 23 அன்று ஆரம்பமாகிறது ஆனால் அதற்க்கு முன்னதாகவே அதன் ஆஃபர் தகவலை பற்றி டீஸ் செய்துள்ளது அதாவது இந்த விற்பனையின் கீழ் கடந்த ஆண்டு அறிமுகமான Apple ஐபோன்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது iphone 16 pro max ரூ.42,901 மிகப்பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் iphone 16 விலை ரூ.17,900க்கு மேல் குறைக்கப்படும்.
இதில் கூடுதலாக iPhone 16 Pro மாடல் மற்றும் iPhone 15 மற்றும் iPhone 14,மாடலை மிக சிறந்த டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனை இவ்வளவு கம்மி விலையில் வாங்க இதுவே சரியான நேரமாகும்.
Flipkart BBD sale மூலம் எந்த iphone என்ன என்ன விலையில் கிடைக்கிறது என பார்க்கலாம் வாங்க.
கடந்த ஆண்டு ரூ.1,44,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.89,999 தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த சலுகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளில் ரூ.5,000 பேங்க் தள்ளுபடியும் அடங்கும், இதன் மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.54,901 பெரும் சேமிப்பு கிடைக்கும்.
இதையும் படிங்க:Apple iPhone 17 Pro Max, iPhone 17 Pro மற்றும் iPhone 17 வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகம்
கூடுதலாக, ஐபோன் 16 விலையும் ரூ.17,901 குறைக்கப்படும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் அதன் அசல் விலையான ரூ.69,900 யிலிருந்து ரூ.51,999க்கு வாங்கலாம்.
கூடுதலாக, ஐபோன் 14 விலை ரூ.39,901 குறைக்கப்படும் என்றும், இதில் ரூ.2,000 பேங்க் சலுகையும் அடங்கும் என்றும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் அதன் ஆரம்ப வெளியீட்டு விலை ரூ.79,900 யிலிருந்து ரூ.39,999க்கு வாங்கலாம்