Asus Zenfone Max Pro (M1) அற்புதமான டிசைன் உடன் அறிமுகமாகியுள்ளது

HIGHLIGHTS

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியான Xiaomi Redmi Note 5 Pro போன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,இந்த அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் ஏற்கனவே  வெளியான  Xiaomi Redmi Note 5 Pro போன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆசஸ் ஜென்ஃபோன் மாக்ஸ் புரோ (M1) ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Xiaomi Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன் போலவே இருக்கும். இதன் விலை மற்றும் விவரக்குறிப்பு பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன்கள் இடையே ஒற்றுமை நிறைய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் Xiaomi Redmi Note 5 Pro உடன் மோதும் விதமாகவே இருக்கிறது  இதில் 5,000mAh திறன் கொண்ட  பேட்டரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. 

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Asus Zenfone Max Pro (M1) சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
– அட்ரினோ 509 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி முதல் புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விறப்னை செய்யப்பட இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :