Asus ROG Phone 2 யின் இந்தியாவில் என்ட்ரி லெவலாக கொண்டு வந்துள்ளது.ஆசூஸின் இரண்டாம் தலைமுறை கேமிங் சென்ட்ரிக் போன் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ROG Phone 2 வில் ஸ்னாப்ட்ரகன் 855+ SoC, 12GB LPDDR4X RAM இதனுடன் இதில் 512GB UFS 3.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஏர் தூண்டுதல்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா சப்போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மூலம் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய காட்சி உள்ளது.
Asus ROG 2 சிறப்பம்சங்கள்:
– 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 120Hz OLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்
– 675MHz அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
– 12 ஜி.பி. LPDDR4x ரேம், 512 ஜி.பி. (UFS 3.0) மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரோக் யு.ஐ.
– டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா 1/2″சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.79
– 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, EIS
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
Asus ROG 2 புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED HDR 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் ரோக் போன் 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 24 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கபப்ட்டுள்ளது. 6000Mah . பேட்டரி கொண்டிருக்கும் ROG போன் 2 மாடலில் 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை
அசுஸ் ரோக் போன் 2 மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் திருவிழாவில் துவங்குகிறது.