ASUS-6Z ஸ்மார்ட்போன் பிலிப் கேமராவுடன் இந்தியாவின் அறிமுக தேதி விவரம் வெளியாகியது.

Updated on 10-Jun-2019

ASUS நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் Zenfone 6 ஸ்மார்ட்போனினை சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் தெரியவந்துள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் அசுஸ் தனது 6இசட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூன் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விவகாரங்களில் அசுஸ் நிறுவனம் சென் மற்றும் சென்ஃபோன் என்ற வார்த்தைகளை பயன்படுத்த உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இதன் காரணமாக அசுஸ் தனது புதிய ஸ்மார்ட்போனை 6இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ASUS  ZENFONE 6 சிறப்பம்சங்கள்:

– 6.46 இன்ச் ஃபுல் HD  பிளஸ் நானோ எட்ஜ் IPS LCD 19.5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சென் யு.ஐ. 6
– டூயல் சிம்
– 48 எம்.பி. ஃப்ளிப் கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், லேசர் AF, EIS
– 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 125-டிகிரி அல்ட்கா வைடு லென்ஸ், f/2.4
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 5000 Mah . பேட்டரி
– க்விக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய அசுஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.46 இன்ச் ஃபுல் HD . பிளஸ் நாட்ச்-லெஸ் LCD  டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சென் யு.ஐ. 6 கொண்டிருக்கும் புதிய சென்ஃபோன் 6 மாடலில் ஆண்ட்ராய்டு கியூ மற்றும் ஆண்ட்ராய்டு ஆர் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்ஃபோனில் ஃப்ளிப் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

ASUS-6Z ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :