Asus ஸ்மார்ட்போனில் அதிரடி விலை குறைப்பு.

Updated on 13-Nov-2019

அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. பின் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.அசுஸ் நிறுவனம் இந்தியாவில் 6இசட் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 7 மாடலுக்கு போட்டியாக ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 

இந்நிலையில், அசுஸ் நிறுவனம் தனது 6இசட் ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் தவிர 5இசட் ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் அசுஸ் 6இசட் டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 5000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெளியீட்டை தொடர்ந்து ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 4000 விலை குறைக்கப்பட்டு ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் 6இசட் பேஸ் மாடல் விலை ரூ. 27,999 என மாறி இருக்கும் நிலையில், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 30,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போன் விலை மார்ச் மாதத்தில் ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில், இதன் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அசுஸ் 5இசட் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 விலையிலும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 6000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :