கொரோனா வைரஸ் பாதிப்பு அப்பிளின் 2020 5G போன் வெளியாக தாமதமாகும்.

Updated on 30-Mar-2020
HIGHLIGHTS

இவை ஜூன் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணம் ஆப்பிள் நிறுவனத்தையும் பாதித்து இருக்கிறது. இதனால் 2020 5ஜி ஐபோன் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய மொபைல்  போன்கள் குறிப்பாக ஐபோன் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் குறைந்து இருக்கும் என்பதே புதிய ஐபோன் வெளியீடு தாமதமாக மற்றொரு காரணம் என கூறப்படுகிறது. இதுதவிர தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இதற்கு காரணமாக கூறலாம்.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஐபோன் வாங்குவதற்கான விருப்பம் குறைந்து இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. வெளியீடு ஏற்கனவே தாமதமாகி விட்டதால், தனது 5ஜி ஐபோன் அதிக பிரபலமாக ஆப்பிள் விரும்பும் என தெரிகிறது.

புதிய ஐபோனிற்கான பொறியியல் பிரிவின் பணிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயண தடைகளால் தாமதமாகி இருக்கின்றன. இது நிலைமையை மேலும் மோசமடைய வைத்திருக்கின்றன.

இதுதவிர ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களும் பணிகளை கணிசமான அளவு நிறுத்தி இருக்கின்றன. சீனாவில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது என்ற போதும், உற்பத்தி ஆலைகள் இன்னமும் முழுவீச்சில் செயல்பட துவங்கவில்லை.

உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் பாகங்களை ஆகஸ்ட் மாத வாக்கில் வழங்குவதாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக இவை ஜூன் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய சூழ்நிலையில், 5ஜி ஐபோன் வெளியீடு தாமதமாகி இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கும் நிலையில், இதுபற்றிய மற்ற விவரங்கள் தெளிவற்றதாகவே இருக்கின்றன. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :