iPhone SE 4.7 இன்ச் HD ரெட்டினா ஸ்கிரீன்,டிஸ்பிளே உடன் அறிமுகம்.

Updated on 16-Apr-2020
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபோன் எஸ்இ 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் எஸ்இ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 சிறப்பம்சங்கள்

– 4.7 இன்ச் 1334×750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளே
– ஏ13 பயோனிக் பிராசஸர்
– 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
– ஐஓஎஸ் 13
– டூயல் சிம்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
– 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ்
– 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– டச் ஐடி கைரேகை சென்சார்
– பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
– ஜிகாபிட் தர 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5
– லித்தியம் அயன் பேட்டரி
– கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை தகவல்.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மாடல் பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 64 ஜிபி மாடல் ரூ. 42,500, 128 ஜிபி ரூ. 47,800 மற்றும் 256 ஜிபி ரூ. 58,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :