ஆப்பிள் யின் Iphone SE 2 அசத்தலான அம்சங்களுடன் வெளியிட்டு விவரம்.

Updated on 31-Oct-2019

ஆப்பிள் நிறுவனத்தின் Iphone SE 2 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Iphone SE 2 மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,300) முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ஆப்பிள் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களில் இரண்டாம் தலைமுறைIphone SE 2. மாடல் பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

முந்தையை ஐபோன் எஸ்.இ. வடிவமைப்பு ஐபோன் 5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டது. புதிய ஐபோன் SE . மாடல் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் பயனர்களுக்கு அப்கிரேடு ஆப்ஷனாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த வடிவமைப்பு வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.

இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் புதிய ஏ13 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதே சிப்செட் தற்போதைய ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 3 ஜி.பி. ரேம் மற்றும் ஃபேஸ் ஐடி அம்சத்திற்கு மாற்றாக டச் ஐடி கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :