Apple iPhone 17 series
Apple இறுதியாக அதன் அடுத்த தலைமுறை ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும். அனைத்து டிவாஸ் டிசைன், டிஸ்ப்ளே , கேமரா மற்றும் பர்போமான்ஸ் அடிப்படையில் பெரிய அப்டேட்களை கொண்டுள்ளது . ஐபோன் 17 இல் தொடங்கி, அப்டேட் செய்யப்பட்ட செல்ஃபி கேமரா மற்றும் 120Hz டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது , ரசிகர்களிடமிருந்து மிகவும் கோரப்பட்ட மேம்படுத்தல்கள். ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை பெரிய டிசைன் மாற்றத்தையும், அனைத்தையும் பார்க்கலாம் வாங்க
ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவில் 120Hz ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 6.3-இன்ச் OLED பேனல், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் பினிஷ் ஆகியவை உள்ளன. இது அலுமினிய சட்டத்தையும் கொண்டுள்ளது, A19 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது, மேலும் 12 ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்கிறது . வெப்பத்தை நிர்வகிக்க உதவும் ஒரு பிரத்யேக வேப்பர் கூலிங் சேம்பர் இது கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 39 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்த சாதனம் மேம்படுத்தப்பட்ட 48MP டிரிபிள் ஃப்யூஷன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன், 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 8x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் உள்ளன. இது 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், 6.9-இன்ச் 120Hz ப்ரோமோஷன் பேனலை ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் டிஸ்ப்ளேவுடன் கொண்டிருக்கும். இது A19 ப்ரோ சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பிடத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் டைட்டானியம் சட்டகத்திற்கு பதிலாக அலுமினியம் மற்றும் கண்ணாடியுடன் கூடிய புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது: 48MP பிரதான, 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ். முன்பக்கத்தில், 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Apple யில் மிகவும் ஸ்லிம்மான போன் iPhone Air அறிமுகம் விலை மற்ற எல்லாத்தையும் பாருங்க
அனைத்து போன்கலுமே iOS 26 யில் இயங்குகின்றன மற்றும் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது .
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் கலரில் வருகின்றன. ப்ரோ 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி வகைகளில் ரூ.1,34,900 முதல் தொடங்குகிறது, அதே நேரத்தில் ப்ரோ மேக்ஸ் ரூ.1,49,900 யில் தொடங்குகிறது, 2 டிபி வரை ஸ்டோரேஜ் விருப்பங்களுடன்.