Apple யில் மிகவும் ஸ்லிம்மான போன் iPhone Air அறிமுகம் விலை மற்ற எல்லாத்தையும் பாருங்க

Updated on 13-Sep-2025
HIGHLIGHTS

புதிய iPhone Air போனை அறிமுகம் செய்துள்ளது

க்ளாஸ் பாடியுடன் மற்றும் A19 சிப்செட்டால் இயக்கப்படுகிறது

ஆனால் அது MagSafe சார்ஜிங்கை வழங்குகிறது

Apple யின் அதன் ‘Awe Dropping’ நிகழ்வில் அதன் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட iPhone 17 Plus போனுக்கு பதிலாக iPhone Air போனை அறிமுகம் செய்துள்ளது இந்த போன் 5.6mm திக்னஸ் மட்டுமே கொண்டது மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மெலிதாக இருந்தாலும், இது A19 Pro சிப்செட் மற்றும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த புதிய மற்றும் ஸ்டைலான ஐபோனின் அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் டிசைன் பற்றி தெரிந்து கொள்வோம்.

Apple iPhone 17 Air சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் ஏர் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் 6.5-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த போனில் டைட்டானியம்+ கிளாஸ் பாடி வழங்குகிறது மற்றும் A19 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது A19 சிப்செட்டைக் கொண்டுள்ளது மற்றும் 12GB RAM ஐ வழங்குகிறது. ஆப்பிள் தற்போது பேட்டரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் அது MagSafe சார்ஜிங்கை வழங்குகிறது.

Apple iPhone 17 Air டிசைன்

ஐபோன் ஏர் வெறும் 5.6 mm திக்னஸ் மற்றும் சுமார் 145 கிராம் எடை கொண்டது, இது ஆப்பிளின் மிக மெல்லிய மற்றும் அதன் இலகுவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். பின்புறத்தில், இது ஒரு மாத்திரை வடிவ கேமரா போர்ட் கொண்டுள்ளது, வலதுபுறத்தில் ஃபிளாஷ் வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் தட்டையான எட்ஜ் , மெல்லிய பெசல்கள் மற்றும் வாப்ரெட் கலர் விருப்பங்களுடன் டிசைன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் நவீன தோற்றத்தை அளிக்கிறது. நீடித்து உழைக்க, ஆப்பிள் போனில் முன்பக்கத்தில் செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பை வழங்கியுள்ளது, அதே நேரத்தில் கூடுதல் எடை இல்லாமல் கூடுதல் வலிமைக்காக பிரேம் டைட்டானியத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க Apple AirPods மற்றும் watch அறிமுகம் ஸ்டைல் லுக் எல்லாம் வேற லெவல்

விலை தகவல்

ஐபோன் ஏர் ஸ்பேஸ் பிளாக், கிளவுட் ஒயிட், லைட் கோல்ட் மற்றும் ஸ்கை ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. கஸ்டமர்கள் இதை 256GB, 512GB அல்லது 1TB ஸ்டோரேஜ் விருப்பங்களில் வாங்கலாம். இந்தியாவில் iPhone Air-ன் விலை ரூ.1,19,900 யில் இருந்து தொடங்குகிறது. இந்த போன் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இப்போதே முன்பதிவு செய்யலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :