நீங்கள் புதியதாக ஒரு iphone வாங்க சரியான் நேரம் பார்த்து காத்து கொண்டிருந்தால் Apple iPhone 16e வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இதில் பவர்புல் பர்போமான்ஸ், ஆப்பிள் இன்டலிஜன்ஸ், ப்ரீமியம் டிசைன் மற்றும் பல சிறப்பு அம்சம் கொண்ட இந்த போனை அமேசானில் ரூ,7,110 வரை குறைக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த போன் அறிமுகத்தின்போது இந்தியாவில் 59,900ரூபாய்க்கு அறிமுகமாகியது அதனை தொடர்ந்து இப்பொழுது iPhone 16e போனை சரியான டிஸ்கவுண்ட் விலையில் வாங்க சரியான நேரமாகும் மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆப்பிள் ஐபோன் 16e தற்போது அமேசானில் ரூ.56,790க்கு கிடைக்கிறது, இதன் விலை ரூ.3,110 குறைக்கப்பட்டுள்ளது. கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்துவதன் மூலம் மேலும் ரூ.4,000 விலையைக் குறைக்கலாம், இதன் மூலம் விலை ரூ.53,000க்குள் குறையும். நீங்கள் இந்த போனை மாதந்திர EMI யில் வாங்க நினைத்தால் , மாதத்திற்கு ரூ.2,753 முதல் தொடங்கும் EMI விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம். கஸ்டமர்கள் நோ கோஸ்ட் EMI விருப்பங்களையும் பெறலாம்.
உங்கள் பழைய போனை புதிய iPhone 16e க்கு மாற்ற விரும்பினால், நீங்கள் ஒரு பரிமாற்றத் திட்டத்தைத் தேர்வுசெய்து, இந்த போன் , மாடல், வேலை நிலைமைகள் மற்றும் வேரியண்டை பொறுத்து ரூ.22,800 வரை மதிப்பைப் பெறலாம்.
ஆப்பிளின் ஐபோன் 16e 6.1-இன்ச் OLED 460ppi சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 1200 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது மற்றும் HDR, ட்ரூ டோன் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் சக்திவாய்ந்த A18 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது iOS 18.4 இல் இயங்குகிறது. இந்த சாதனம் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68-சான்றளிக்கப்பட்டது. இந்த சாதனம் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை ஆதரிக்கிறது.
இந்த சாதனத்தின் கேமராவில் OIS உடன் கூடிய 48MP வைட்-ஆங்கிள் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம், 4K 60 fps இல் டால்பி விஷனுடன் கூடிய HDR வீடியோ பதிவு மற்றும் 30 fps இல் 4K HDR வரை ஆதரவுடன் சினிமாடிக் பயன்முறை ஆகியவை உள்ளன. இந்த போனின் முன்பக்கத்தில் 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது, இது 60 fps இல் 4K வரை ரெக்கார்ட் செய்ய முடியும்.