ஆப்பிள் மற்றும் கூகிள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதிய முயற்சி.

Updated on 14-Apr-2020

ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசாங்கங்கள் மற்றும் ஆரோக்கிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இரு நிறுவனங்களும் சேர்ந்து ஏபிஐக்களை வெளியிட்டு சிஸ்டம் தக தொழில்நுட்பத்தை கொண்டு காண்டாக்ட் டிரேசிங் செய்ய இருக்கின்றன.

வரும் மாதங்களில் இரு நிறுவனங்களும் இணைந்து ப்ளூடூத் சார்ந்து இயங்கும் விரிவான காண்டாக்ட் டிரேசிங் பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடபட இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியின் ஒருகட்டமாக ஆப்பிள் மற்றும் கூகுள் தொழில்நுட்ப திட்ட வரைவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றன.

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மே மாத வாக்கில் ஏபிஐ-க்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஏபிஐ-க்கள் பொது சுகாதார அதிகாரிகள் பயன்படுத்தும் செயலிகள் இயக்கப்படும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ செயலிகள் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :