Amazon Great Indian Festival sale யின் Iphone 11 விற்பனையில் மிக பெரிய சாதனை.

Updated on 21-Oct-2020
HIGHLIGHTS

அமேசான் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடல் ரூ. 47,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டது

விற்பனையில் இம்முறை கடந்த ஆண்டை விட அதிகளவு வரவேற்பு கிடைத்து இருப்பதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. இந்த விற்பனையின் முதல் நாளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக ஐபோன்கள் விற்பனையாகி இருப்பதாக அமேசான் தெரிவித்து இருக்கிறது. அமேசான் சிறப்பு விற்பனையின் முதல் நாள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நடைபெற்றது.

சிறப்பு விற்பனையில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள், பெரிய மின்சாதனங்கள் மற்றும் நுகர்வோர் மின்சாதனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கின்றன.
 
அமேசான் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடல் ரூ. 47,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு விற்பனை இன்று (அக்டோபர் 21) வரை நடைபெறுகிறது. விற்பனையில் இம்முறை கடந்த ஆண்டை விட அதிகளவு வரவேற்பு கிடைத்து இருப்பதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை ஐபோன் 11, ரெட்மி நோட் சீரிஸ், ரெட்மி 9ஏ, ஒன்பிளஸ் 8டி, நார்டு மற்றும் சாம்சங் எம்31 உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :