5ஜி யில் புதிய சாதனை இவ்வளவு ஸ்மார்ட்போன்களா.

Updated on 11-May-2020
HIGHLIGHTS

முதல் காலாண்டில் மட்டும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் 2 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இன்னும் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. எனினும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட துவங்கிவிட்டன. 

 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2 சதவீத 5ஜி ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முதல் காலாண்டில் மட்டும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் 2 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் அதீத வளர்ச்சி பெற்றதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் 30 சதவீதம் பங்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து விவோ மற்றும் சாம்சங் உள்ளிட்டவை முறையே 17 மற்றும் 16 சதவீத பங்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்த முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரியல்மி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 119 சதவீதம் மற்றும் 83 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகத்தில் 78 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. திடீர் வளர்ச்சிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :