2020 யின் பெஸ்ட் 6000Mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள்

Updated on 25-Jul-2022
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் வெறும் காலிங்கிற்க்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் . இன்றைய காலத்தின் ஸ்மார்ட்போன் ஒருவரின் கேமராவாகவும், ஒருவரின் கேமிங் சாதனமாகவும் மாறிவிட்டது., ஆனால் சில ஹார்ட்கோர் கேமிங் பிரியர்களைப் பற்றி பேசும்போது, ​​அவர்களுக்கு சக்திவாய்ந்த சமீபத்திய ப்ரோசெசர் கொண்ட சிறந்த பேட்டரி ஸ்மார்ட்போன் தேவை, அது அவர்களின் கேமிங்கை இன்னும் சிறப்பாக செய்யும், அந்த வகையில்  இன்று  நாம்  2020 யின் Best  6000Mah  பேட்டரி  ஸ்மார்ட்போன்கள்  பற்றி பார்க்கலாம் வாங்க.

REDMI 9 POWER.
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

REALME C15 
புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே உள்ளது  கேமரா பற்றி பேசுகையில் இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ மற்றும் 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 Mah பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

REALME NARZO 20 
REALME NARZO 20 சிறப்பம்சம் பற்றி பேசுகையில் இதில் – 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன் டிஸ்பிளே புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.  பேட்டரி பற்றி பேசுகையில் – 6000 Mah பேட்டரி வழங்கப்படுகிறது.

POCO X3 
 POCO X3  ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 Mah பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

SAMSUNG GALAXY M51
சாம்சங் கேலக்ஸி M51  யில் ஒரு பெரிய  7000mAh  பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது. சாதனத்தில் 25W பாஸ்ட் சார்ஜ் செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :