2019 யின் மிக சிறந்த டாப் 10 செல்பி கேமராவுடன் வரும் ஸ்மார்ட்போன்கள்

Updated on 10-Jun-2019

நாம்  ஒரு போன்  வாங்குகிறோம் என்றால் முதலில் நம் கண்களில் படுவது அதன் கேமரா தான், ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்க்கு  முன்னாள், குறைந்தபட்சம் 10 குறைவது  செல்பி  எடுத்து பார்ப்பது மட்டுமில்லாமல் அதன் கேமரா தரம்  எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான்  வாங்குகிறோம்.அந்த வகையில் இன்று நாம் இந்த 2019 ஆண்டில்  அறிமுகமான  10 மிக சிறந்த   செல்பி கேமரா  போன்களை பற்றி தான்  பார்க்க போகிறோம்.

SAMSUNG GALAXY A70
சாம்சங் Galaxy A70  ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் HD . பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிளாஸ்டிக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் 4500 Mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Vivo Y17
 புதிய விவோ வை17 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது.

புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 Mah. பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

REALME 3 PRO

புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதன் கேமராவை பற்றி பேசினால்,16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS மற்றும் இதில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோட்  இதனுடன் இதில் – 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″ உடன் வழங்கப்படுகிறது.

அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY A30
GALAXY A30 டிஸ்பிளே – 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் எக்சைனோஸ் 7904 சிப்செட் வழங்கப்படுகிறது 

-சாம்சங்கின் கேமராவை பற்றி பேசினால்,16 எம்.பி. பிரைமரி கேமரா இதனுடன் 5 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது மேலும் இதன் செலிபி  கேமராவை 16 எம்.பி. கொண்டுள்ளது.

இதனுடன் இதில் 4000 Mah . பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இது  ஆண்ட்ராய்டு பை இயங்குகிறது.

Vivo V15 Pro 
Vivo V15 Pro இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதை தவிர இதில்  தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த மொபைல்  போனை ஒரு மிட் ரேன்ஜ்  மொபைல்  வடிவியில்  இந்திய சந்தையில்  அறிமுகம் செய்யப்பட்டது  மற்றும் இதன் விலை  Rs 28,990 ஆக  இருக்கிறது  உலகின்  முதல் முறையாக  32MP Pop-up  செல்பி கேமராவுடன் அறிமுகவது.

புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

போட்டோ எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY S10

மூன்று கேலக்ஸி S10  ஸ்மார்ட்போன்களிலும் புதிய பன்ச்-ஹோல் ரக செல்ஃபி கேமராக்களை வழங்கி இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளேக்கள், HDR. 10 பிளஸ் சான்று, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை மூன்று மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் கேமராவை பற்றி பேசினால்,  12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 – f/2.4, OIS, இதன் இரண்டாவது 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS மற்றும் இதில் 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2 கொண்டுள்ளது  இதனுடன் இதன் செல்பி கேமரா பற்றி  பேசினால் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது.

OPPO K1

புதிய  K1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல்HD . பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ள  K1 ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.  இந்தியாவில் புதிய ஒப்போ K1 ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் கோ புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.. 

REDMI Y3
Redmi Y3 இந்தியாவில் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதனுடன் இந்த  சாதனத்தின்  சிறப்பு இதில் 32 மெகாபிக்ஸல்  செல்பி கேமரா கொண்டிருக்கிறது.மற்றும் அதன் ஸ்க்ரீன் பிளாஷில் AI  போர்ட்ரைட் மோட்  மற்றும் 360  டிகிரி AI  பேஸ்  அன்லாக்  சப்போர்ட் செய்கிறது இந்த  ஸ்மார்ட்போனில்  ஒரு 6.26 அங்குல முழு HD  பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் பெற்றதாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

கேமரா பற்றி  பேசினால் இந்த சாதனத்தில் 12+2 மெகாபிக்ஸல் AI டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில்   AI  சீன டிடக்சன் EIS  எலக்ட்ரோனிக்  இமேஜ் போன்றவை வழங்குகிறது கேமரா AI உள்ளே கண்டறிதல் கண்டறிய முடியும் 33 பிரிவுகள். ஸ்மார்ட்போன் முன் 32 மெகாபிக்சல் செல்பி கேமராகொண்டு  உள்ளது

HUAWEI Y9 PRIME (2019)
Huawei  நிறுவனம் இந்தியாவில் Y9  2019 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம், 16 எம்.பி. பிரைமரி கேமரா,LED. ஃபிளாஷ், 2 எம்.பி. செகண்டரி கேமரா பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இரு கேமரா சென்சார்களிலும் ஏ.ஐ. அ்சஙங்கள் வழங்கப்பட்டுள்ளது. வளைந்த 3D ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கும் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :