எல்ஜி நிறுவனத்தின் புதிய குளிர்சாதன பெட்டி – எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின் முன்புறம் உள்ள எல்இடி பேனல்களை கொண்டு பல்வேறு நிறங்களை ஒளிர விடுவது, வித்தியாசமான சிறப்பம்சம் ஆகும். இதில் ஆர்ஜிபி பேனல்கள் உள்ளன.
Survey
✅ Thank you for completing the survey!
இவற்றை கொண்டு 22 நிறங்களில் ஒன்றை மேலே உள்ள கதவுகளுக்கும், லோயர் பேனல்களில் 19 நிறங்களில் ஒன்றையும் தேர்வு செய்து கொள்ளலாம். நிறம் மற்றும் தீம் அடிப்படையில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஃப்ரிட்ஜ்-ஐ ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு மியூசிக் ஸ்டிரீமிங் செய்யலாம்.
ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு இருப்பதால், புதிய எல்ஜி குளிர்சாதன பெட்டியை ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவைகளுடன் இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்க முடியும். இவ்வாறு செய்யும் போது குளிர்சாதன பெட்டியில் உள்ள எல்இடி பேனல்கள் பாடலுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொண்டே இருக்கும். பேனல்கள் ஆப் செய்து விட்டால், லக்ஸ் கிரே மற்றும் லக்ஸ் வைட் டிசைனில் காட்சியளிக்கும்.
சாம்சங் நிறுவனமும் தனது பிஸ்போக் குளிர்சாதன பெட்டியில் இதே போன்ற வசதியை வழங்கும் நிலையில், புதிய எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை இணைத்து குளிர்சாதன பெட்டியின் நிறத்தை விரும்பிய நேரத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றியும் எந்த தகவலும் இல்லை
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile