லெனோவோ ஏஆர் கிளாஸ் பில்ட் இன் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்.
லெனோவோ நிறுவனம் கிளாசஸ் T1 ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏஆர் கிளாஸ் இரு கண்களிலும் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் உள்ளன
ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது.
லெனோவோ நிறுவனம் கிளாசஸ் T1 ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஏஆர் கிளாஸ் இரு கண்களிலும் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 1920×1080 பிக்சல் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் பிரைட்னஸ் அளவுகள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது.
Surveyலெனோவோ கிளாசஸ் T1 ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டிருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் அல்லது கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி கேபிள் கொண்டு பயனர்கள் இதனை ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைத்து கொள்ளலாம். ஐபோன் பயனர்கள் ஹெச்டிஎம்ஐ டு கிளாசஸ் அடாப்டர் பயன்படுத்த வேண்டும்.
மேலும் அதிக தரமுள்ள ஹின்ஜ்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டெம்பில் ஆர்ம்கள், நோஸ் பேட்கள் உள்ளன. இத்துடன் பயனர்களின் சவுகரியத்திற்கு ஏற்ப மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நோஸ் பேட்கள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள இன்பில்ட் ஸ்பீக்கர்கள் பொழுதுபோக்கு தரவுகளை பார்க்கவும் வழி செய்கிறது. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்களுடன் இணைந்து செயல்பட ஏதுவாக ரெடி ஃபார் எனும் அம்சம் கொண்டிருக்கிறது.
முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் அங்கு லெனோலோ யோகா கிளாசஸ் என அழைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் இந்த ஏஆர் கிளாஸ் விற்பனை அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. விற்பனை நெருங்கும் போது இதன் விலை அறிவிக்கப்படும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
