கூகுள் டூடுல் யில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளுக்கு மரியாதை.
கூகுள் டூடுலில் சிவாஜி கணேசன்
இன்று நடிகர் திலகம் பிறந்த நாள்
தமிழர் பெருமிதத்தை காட்டிய கூகுள்
கூகுள் டூடுலை, பெங்களூரைச் சேர்ந்த ஓவிய கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸியால் உருவாக்கப்பட்டுள்ளது கூகுள் டூடுல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93rd பிறந்தநாளைக் கொண்டாடும் கொண்டாடும் நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
Surveyஅக்.01, 2021,வெள்ளிக்கிழமை – இந்திய சினிமாவில் மிகவும் செல்வாக்கு கொண்ட நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன் ஐயாவின் பிறந்த தினம் ஆகும்!
ஆரம்ப கால வாழ்க்கையில் விழுப்புரம் சின்னையா கணேசன் அல்லது வி.சி. கணேசன் என்று அழைக்கப்பட்ட நம்ம சிவாஜி சார், அக்டோபர் 1, 1928 அன்று, தமிழ்நாட்டின் அப்போதைய தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் உள்ள விழுப்புரத்தில், ரயில்வே ஊழியரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சின்னையா மற்றும் ராஜாமணி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
7 வயதில், அவர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார், அங்கு அவர் குழந்தை மற்றும் பெண் வேடங்களில் நடிக்கத் தொடங்கினார், பின்னர் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். ஒருகட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் சி.என் எழுதிய சிவாஜி கந்த சாம்ராஜ்யம் நாடகத்தில் மராட்டிய வீரர் சிவாஜியின் கதாபாத்திரமாக நடித்தார், பின்னர் அதுவே அவரது வாழ்க்கையின் மாபெரும் அடையாளமாக உருமாறியது.
திரை உலகில், மாபெரும் உச்சங்களை தொட்ட நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளில், அவருக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வண்ணம் உலகின் மாபெரும் தேடுபொறி தளமான கூகுள் தனது ஹோம் பேஜில் டூடுல் ஒன்றை உருவாக்கி உள்ளது.
ரெஸ்ட் ஐஸ் இன் தி ஹிஸ்டரி (Rest is in the History) என்பது போல மீதமுள்ள கதைகள் அனைத்தையும் நாம் அனைவருமே அறிவோம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
