இனி GPay, Paytm மற்றும் phonepeக்கு சொல்லுங்க குட்பாய், ஸ்ரீதர் வேம்பு Zoho Pay வருது செம்ம கெத்தா

Updated on 08-Oct-2025
HIGHLIGHTS

Zoho யின் அரட்டைப் ஆப மக்களை அதிகபடியாக கவரும் வகையில் இருக்கிறது

தற்பொழுது GPay, Paytm மற்றும் phonepe போல UPI பேமன்ட் சேவையை கொண்டு வந்துள்ளது

Zoho அதன் பேமன்ட் சேவையை கொண்டு வந்துள்ளது

Zoho யின் அரட்டைப் ஆப மக்களை அதிகபடியாக கவரும் வகையில் இருப்பதால் இந்த ஆப் தற்பொழுது பெரும் அளவில் டவுன்லோட் செய்து வருகிறார்கள். மேலும் இது நம் இந்திய நாட்டினர் மற்றும் தமிழருடையது என்பதால் இன்னும் மக்களை அதிகமாக ஈர்க்கப்படுகிறது, மேலும் தற்பொழுது பாப்புலர் ஆப் ஆன WhatsAppக்கு டஃப் கொடுக்கும் அளவில் இது அதிக டவுன்லோட் பெற்றுள்ளது மேலும் தற்பொழுது Pay, Paytm மற்றும் phonepe போல UPI பேமன்ட் சேவையை கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீதர் வேம்பு X பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் இதன் நன்மைகள் பற்றி [பார்க்கலாம் வாங்க.

Arattai யிலிருந்து பணம் அனுப்பலாம்

Zoho யின் CEO ஆன ஸ்ரீதர் வேம்பு அவர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் X பக்கத்தில் Zoho அதன் பேமன்ட் சேவையை கொண்டு வந்துள்ளது, இது இப்பொழுது அதன் பாய்ன்ட் ஆப் சேல் (POS) டிவைசை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த டிவைசில் கிரெடிட்/டெபிட் கார்ட் மற்றும் QR கோட் போன்ற பெமன்ன்ட் செய்ய முடியும் இதனுடன் paytm ,phonepe போல சவுண்ட் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது, இந்த ட்விட்டில் Arattai பேமன்ட் சேவை கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது இது விரைவில் வரும்

அதாவது இதில் தவிட்டின் கடைசி பகுதியில் விரைவில் நீங்கள் Zoho Pay பயபடுத்தளம் இதற்காக எங்களுக்கு சிறிது நாட்கள் மட்டும் கொடுங்கள் என எழுத்தப்பட்டுள்ளது அதன் பிறகு whatsApp,GPay, Phone Pay, போல நீங்கள் இதில் பணம் செலுத்த முடியும்

Zoho செம்ம பாப்புலர் அம்சங்கள்

ஜோஹோவின் ப்ரோட்கள் மற்றும் ஆப்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை வேம்பு X மூலம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், ஜோஹோவின் ‘அரட்டை’ தயாரிப்பு வெளியில் இருந்து பார்க்க எளிமையாகத் தோன்றலாம், ஆனால் உள்ளே இருந்து பார்க்க மிகவும் சக்தி வாய்ந்தது என்று அவர் ட்வீட் செய்தார். இந்த பொருட்கள் ஜோஹோவின் சொந்த சிறப்பு பொறியியல் கட்டமைப்பில் இயங்குகிறது. இந்த சிறப்பு கட்டமைப்புகளில் ஒன்று மெசேஜிங்/ஏவி ஆகும்,

இதையும் படிங்க ஓரம்போ WhatsApp இனி அரட்டை (Arattai) அதும் TV யில் மெசேஜ் பண்ணலாம் தமிழர் என்றால் தனி கெத்து தான்

இது 15 ஆண்டுகளாக ஜோஹோவின் நிகழ்நேர பணிகளைக் கையாண்டு வருகிறது. இதன் காரணமாக, அரட்டையில் வேகமான மற்றும் மென்மையான அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் சாத்தியமாகும். இந்த செய்தி/ஏவி கட்டமைப்பு ஜோஹோவிற்கு மிகவும் முக்கியமானது. இது தயாரிப்பு நிகழ்நேரத்தில் செயல்பட உதவுகிறது. 15 வருட கடின உழைப்பின் மூலம் இந்த கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :