பணம் அனுப்பனுமா? எடுடா செல்போனை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
வங்கி ட்ரெண்செக்சன்களை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் நீண்ட ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது
ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற இது அனுமதிக்கிறது
பணம் அனுப்பனுமா? எடுடா செல்போனை என்ற நிலைதான் தற்போது உள்ளது. ஸ்மார்ட்போனில் இருக்கும் போன்பே, கூகுள்பே போன்ற யூபிஐ மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அதேபோல, கடைகளுக்கு ரொக்கம் கொடுப்பதெல்லாம் இப்போது குறைந்துவிட்டது. சிங்கிள் டீ குடித்துவிட்டு ஸ்கேன் செய்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். பணம் புழங்கும் இடமாக மாறிவிட்ட யூபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே நாம் அதனை கவனமாக கையாள வேண்டும்.
யுபிஐ (UPI) என்றால் என்ன?
வங்கி ட்ரெண்செக்சன்களை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் நீண்ட ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது தான் இந்த UPI. அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு. யுபிஐ (UPI) என்றால் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payment Interface (UPI)).
ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற இது அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24×7 அடிப்படையில் செயல்படுகிறது.
யுபிஐ (UPI) பயன்படுத்த, நீங்கள் ஒரு பேங்க் அக்கவுன்ட் (Bank account) வைத்திருக்க வேண்டும், அதாவது, யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்த உங்கள் பேங்க் உங்களை அனுமதிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (State Bank of India (SBI), HDFC Bank, and ICICI Bank) போன்ற பேங்க்களில் பேங்க் அக்கவுன்ட்டை வைத்திருக்க வேண்டும். உங்கள் பேங்க் யுபிஐ பேமெண்ட்டுகளை சப்போர்ட் செய்கிறதா, என்பதை நீங்கள் செக் செய்து பார்த்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் யுபிஐ சப்போர்ட் ஆப்ஸைப் டவுன்லோட் செய்ய வேண்டும்.
யுபிஐ மூலம் பணம் செலுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் BHIM முக்கியமானது, இது NPCI ஆல் உருவாக்கப்பட்டது, மேலும் சில தனியார் ஆப்ஸ்களிளும் இத்தகைய பேமெண்ட்டுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, அமேசான் பே (Paytm, PhonePe, Google Pay, Amazon Pay) போன்றவை மக்களிடையே பிரபலமானவை. வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்க.
UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டுமே UPI பின்னை பதிவிட வேண்டும். மற்றொருவரிடம் இருந்து பணத்தை பெற UPI பின்னை பதிவிட வேண்டியதில்லை
யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும். பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது
UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு யாருடனும் பகிர கூடாது
UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை
தெரியாத அல்லது அறிமுகம் இல்லாத நபர் கேட்கும்போது நம்முடைய UPI ஐ ஷேர் செய்வது அல்லது தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நமது போனுக்கு எதாவது sms வந்தால் அதனை தவிர்க்க வேண்டும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.