இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் மாஸான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டரில் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலக அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 'வாரிசு' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்வுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்குடன் கூடிய இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. அதோடு தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்
Gear up for #VarisuPongal