அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2014 -ல் எச். வினோத் இயக்கத்தில் சதுரங்கவேட்டை என்ற திரைப்படம் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நட்டி நட்ராஜ் நடித்திருப்பார்.
இந்த படத்தை வினோத் இயக்காமல் கதை மற்றும் எழுதியிருந்தார். சதுரங்க வேட்டை 2 படத்தை நிர்மல்குமார் இயக்கியிருந்தார். நிதி பிரச்சனை காரணமாக சதுரங்கவேட்டை படம் வெளியாவது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருந்தது.
இருப்பினும், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் ஒருவழியாக எல்லா பிரச்சனைகளையும் முடித்து, படக்குழுவினர் சதுரங்க வேட்டை 2 திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
மோசடி, ஏமாற்று வேலை எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை தொகுத்து, மிகவும் சுவாரசியமாக சதுரங்க வேட்டை படத்தை எச். வினோத் அளித்தார். மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெரிய நடிகர்களின் பங்களிப்பு ஏதுமின்றி சதுரங்க வேட்டை திரைப்படம் மிகப்பெரும் வசூலை பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இயக்குனர் எச்.வினோத் பார்க்கப்பட்டார். இதன் பின்னர் அவர் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை படங்கள் வரவேற்பை பெற்றன.
இதற்கிடையே, சதுரங்கவேட்டை படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. 2-ம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்