சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட் MIL-STD-810 தரச்சான்று பெற்றிருக்கிறது. இதில் 1.2 எம் ஆண்டி-ஷாக் இன்பாக்ஸ் ப்ரோடெக்டிவ் கவர், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சிறப்பம்சங்கள்:
– 8.0 இன்ச் 1280×800 பிக்சல் WXGA TFT டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
– மாலி T830 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– கைரேகை சென்சார்
– எஸ் பென்
– 4ஜி எல்.டி.இ., வைபை., ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4,450 mAH . பேட்டரி
புதிய டேப்லெட்டில் நாக்ஸ் (Knox) பாதுகாப்பு தளம் வழங்கப்பட்டிருப்பதால், இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன எஸ் பென் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. வைபை மற்றும் 4ஜி என இருவித வெர்ஷன்களில் கிடைக்கும் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் 4450 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.50,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.