OnePlus Pad 3 அறிமுகமானது 12,140mAh பேட்டரி 80W SUPERVOOC சார்ஜிங் சப்போர்ட் ஆன விலை மட்டும் சஸ்பென்ஸ்

Updated on 05-Jun-2025

OnePlus இன்று அதன் புதிய ப்ளாக்ஷிப் டேப்லெட் OnePlus Pad 3 அறிமுகம் செய்தது நிறுவனத்தின் படி இந்த டிவைஸ் 2025 யின் Android டேப்லெட் புதிய வரவேற்ப்பை கொண்டுவந்துள்ளது, மேலும் இந்த OnePlus Pad 3 யில் Snapdragon 8 Elite சிப்செட்டுடன் இதில் 12,140mAh பேட்டரி வளங்கப்படுகிறதும் இதன் பல அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus Pad 3 விலை தகவல்.

தற்பொழுது OnePlus Pad 3 யின் இந்திய விலை தகவல் பற்றி வெளியிடவில்லை, ஆனால் OnePlus டேப்லெட் மற்ற க்ளோபல் சந்தையில் கிடைக்கிறது, மேலும் இந்த OnePlus Pad 3 Frosted Silver கலர் ஆப்சனில் அறிமுகம் செய்யப்பட்டது.

OnePlus Pad 3 சிறப்பம்சம்.

OnePlus Pad 3 அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 13.2-இன்ச் ஸ்க்ரீன் உடன் 3.4K ரேசளுசன் 12-bit கலர் டெப்த் உடன் 144Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, மேலும் இது 5.97mm மெட்டல் யூனிபாடி டிசைன் கொண்டுள்ளது இதனுடன் இது 7:5 ஸ்க்ரீன் ரேசியோ சப்போர்ட் கொண்டுள்ளது.

மேலும் இது Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் ப்ரோசெசருடன் pro-grade Stylo 2 மற்றும் ஸ்மார்ட் கீபோர்ட் போன்ற அட்வான்ஸ்ட் டூல் இருக்கிறது மேலும் இது 16GB of LPDDR5T RAM சப்போர்ட் உடன் இது Wi-Fi 7 சப்போர்ட் உடன் OnePlus AI அம்சமும் கொண்டுள்ளது மேலும் இது OxygenOS 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது .

இதையும் படிங்க:OnePlus 13s காம்பேக்ட் டிசைன் உடன் அசத்தல் லுக்கில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

மேலும் இந்த OnePlus Pad 3 கேமரா பற்றி பேசினால் இதன் பின்புறத்தில் சிங்கிள் 13MP கேமரா மற்றும் முன் பக்கத்தில் செல்பிக்கு 8MP செல்பி கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த டேப்பில் AI Translation, AI Writer, AI Speaker, மற்றும் AI சம்மரி போன்ற அம்சம் கொண்டுள்ளது மேலும் இந்த டேப்பில் மொத்தம் 8 ஸ்பீக்கர் சிஸ்டம் இருக்கிறது இதனுடன் இதில் நான்கு வூபார் மற்றும் நான்கு ட்வீஸ்டர் போன்றவை இருக்கிறது

கடைசியாக இந்த டேப்பில் 12,140mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த டேப் Storm Blue மற்றும் Frosted Silver கலரில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :